இறக்காமத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னை நாற்றுகள் வழங்கிவைப்பு.

ஜனாதிபதியின் “சௌபாக்கிய” கொள்கைக்கு அமைவாக நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க பல்வேறு  வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை மையமாகக் கொண்ட பூரணத்துவமான வதிவிடம் சார் மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் “சமூர்த்தி அருணலு” (வாழ்வாதார அபிவிருத்தி) தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது
இந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு தென்னை நாற்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களின் தலைமையில் வியாழக் கிழமை பிரதேச செயலக  சமுர்த்தி காரியாலத்தில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.சி.எம் தஸ்லீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் டீ. எழிலரசன், திட்ட முகாமையாளர் பிரியந்தி வேரகொட, நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் எம்.ஐ. மக்பூல் உட்பட பிரதேச செயலக பிரிவுகளுக்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.