சாய்ந்தமருதில் சமுர்த்தி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பத்திரம் வழங்கி வைப்பு.

இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களின் மனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் “சமுர்த்தி அருணலு” வாழ்வாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிப் பத்திரம் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.எம்.நஜீம் தலைமையில் இன்று (20) வெள்ளிக்கிழமை சமுர்த்தி வங்கியில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எல். யூ.ஜூனைதா, எஸ். றிபாயா, யூ.எல்.ஏ. கபூர், உதவி முகாமையாளர்களான எம்.எம்.எம். முபாறக், கலாநிதி ஏ.எம்.எம்.றியாத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 340 சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பத்திரமும் 50 பேருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு சுகாதார வழிமுறைகளை  பேணி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.