மூன்றாவது நாளாகவும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பினால் அல்லலுரும் மக்கள்…

அக்கரைப்பற்று பனங்காடு வைத்தியசாலையின் வைத்தியர் கடந்த 17ம் திகதி பொது மகன் ஒருவரால் தாக்கப்பட்டதையடுத்து உரியவருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினராலும் கோரப்பட்டு வந்ததையடுத்து வைத்தியரை தாக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.இது இவ்வாறு இருக்க தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த வைத்தியசாலையில் நம்பியுள்ள பல நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். போக்குவரத்து வசதி அற்ற பல பாமர ஏழை மக்களின் சேவை வழங்கும் வைத்தியசாலையாக இவ் வைத்தியசாலை இருந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தும் நடவடிக்கை எடுக்கும்படி கோரி இருந்தும் தொடர்ந்தும் வைத்தியசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் பொது மக்களும் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
எனவே சிறந்த சேவை மனப்பாங்கு கொண்ட வைத்தியசாலை ஊழியர்களை நியமித்து வைத்திய சாலையை உடனடியாக இயங்கும்படி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட புதிய உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றனர்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.