மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் அண்டிய பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு!

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சத்துருக்கொண்டன்  பிரதேசத்தில் கும்பிளமடு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று (20) திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00  மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாரிற்கு  கிடைத்த தகவலையடுத்து திராய்மடு  விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த 81மில்லிமீட்டர்  மோட்டார் குண்டை  மீட்டுள்ளனர்.
திலிப் யூட் என்பவருக்கு சொந்தமான  தனிப்பட்ட  காணிக்குள் இருந்தே இந்த மோட்டார்  குண்டு  மீட்கப்பட்டது.
இது  யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மட்டக்களப்பு  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்