கல்முனையில் கெளபி அறுவடை…

( எம். என். எம். அப்ராஸ்)

‘சௌபாக்கியா’  வேலைத்திட்டத்தின் கீழ் உப உணவு பயிர் செய்கை மேற் கொள்ளும்

விவசாயிகளுக்குவிவசாய திணைக்களித்தினால்  நாடளாவிய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும்

வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின்வழிகாட்டலில் ,கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட கல்முனை அன்பு சகோதரஇல்லத்தில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட கெளபி அறுவடை செய்யும்  நிகழ்வு நேற்று (20) இடம்பெற்றது.

குறித்த அறுவடையானது மறு பயிர் செய்கைவிவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச் .ஏ.நிஹார்  ,

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய நிலைய பிரதம போதனாசிரியர் திருமதிஎஸ்.கிருத்திகா, விவசாய போதனாசிரியர் என் .யோகலக்ஷ்மி ஆகியோரின்  மேற்பார்வையில்

இடம்பெற்றது .

இதேவளை குறித்த இடத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன்னர் கல்முனை விவசாய விரிவாக்கல்

 நிலையத்தின் வழிகாட்டலில், உப உணவு பயிர் செய்கையில் ஒன்றான  உளுந்து  முதன் முதலாக பயிரிடப்பட்டு  நல்ல விளைச்சல் பெறப்பட்டு அறுவடை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.