யாழ் கல்வியங்காட்டில் நண்பகலில் கைவரிசையை காட்டிய திருடர்கள் -இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது தப்பியோட்டம் !!!

நாட்டில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டிருந்த நேரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வேளாதோப்பு வீட்டொன்றில்  இன்று (21) சனிக்கிழமை நண்பகல் 01.30 மணிக்கு பழைய இரும்பு பொருட்கள்  திருடிய  இனந்தெரியாத இரு நபர்களை குறித்த பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முயற்சி செய்த போது திருடிய பழையபொருட்களையும்  தமது துவிச்சக்கர வண்டி ஒன்றையும் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதியசெம்மணி வேளாதோப்பு வீதியிலுள்ள கிராமசேவையாளர்  வீட்டில் உட்புகுந்து இன்று (21-08-2021) சனிக்கிழமை நண்பகல் 01.30 மணிக்கு  பழைய இரும்பு பொருட்கள்  திருடிய  இனந்தெரியாத நபர்கள் இருவரை குறித்த பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடிக்க முயற்சி செய்த போது திருடிய பழையபொருட்களையும்  தமது துவிச்சக்கர வண்டி ஒன்றையும் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பொதுமக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு இனந்தெரியாத நபர்கள் திருடிய பழைய இரும்பு பொருட்களை குறித்த வீட்டாரிடம் ஒப்படைத்ததோடு இனந்தெரியாத நபர்கள் விட்டுச்சென்ற துவிச்சக்கர வண்டியை கோப்பாய் பொலிஸ்நிலையம் எடுத்துச்சென்றிருந்தனர்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.