இம்முறை 5000ம் ரூபா நிவாரணம் இல்லை வெறும் 2000ம் ரூபாதான்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் குறைந்த வருமானம்  பெரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு எதிர்வரும் 30ம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொடுப்பனவு பற்றி நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்