எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கருத்து வௌியிட்ட தொழிற்சங்கவாதி கைது…

தேசிய சேவை சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாகவும் ஊடக சந்திப்பு நடத்தி ஆனந்த பாலித்த தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்