அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு 25 ஆம் திகதி முதல் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன !

அம்பாறை மாவட்டத்தில்  ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன லகுகல பிரதேச செயலாளர்   சந்தரூபன் அனுருத்த அம்பாறை பிரதேச செயலாளராகவும், அம்பாறை பிரதேச செயலாளர் எம் எஸ் என் சொய்ஸா சிறிவர்தன  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ எம் லத்தீப்  நிந்தவூர் பிரதேச செயலாளராகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ எம் எம் அன்ஷார் (நளீமி) அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகவும், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம் எஸ் எம் றஸ்ஸான் (நளீமி) இறக்காமம் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்