வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன…

வவுனியாவில் ஊரடங்கு சட்ட நேரத்தில் திறந்திருந்த 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் முழுமையான முடக்கம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் காவற்துறையினரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் முடக்க காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 6 வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவற்துறையினரால் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுதப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்