கொரோனாவுக்குப் பயந்து வைத்தியசாலைக்கு செல்வதைத் தவிர்த்தால் உயிரிழக்கவே நேரிடும் – கொழும்பு வைத்திய நிபுணர் எச்சரிக்கை…

கொரோனாத் தொற்றுக்குப் பயந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டாம் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர அறிவுறுத்தியுள்ளார்.

மாரடைப்பு போன்ற தீவிர நோய் ஏற்படும்போது, வைத்தியசாலைக்கு விரைந்து செல்லாவிட்டால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சைப் பிரிவுகள் தனியாக இயங்குவதால் அது தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நீண்ட நாள் நோய் நிலைமையை உடையவர்கள் மற்றும் திடீர் நோய் நிலைமைக்கு உள்ளாகுபவர்கள் வைத்தியசாலைக்குச் செல்லத் தயங்க வேண்டாம் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஹர்ஷ சதீஷ்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்