ஆலையடிவேம்பில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு…

60 வயதிற்குமேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.வருமுன் காப்போம் எனும் அடிப்படையில் குறித்த வயதிற்கு மேற்பட்டவர்களை கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இப்பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரிதிருமதி எஸ்.அகிலன் தலைமையிலான வைத்திய குழுவினர் இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.இப்பரிசோதனை நடவடிக்கை நாளையும் தொடரும் நிலையில் இதனடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட 50 பேருக்கான சோதனை நடவடிக்கையில் மூவர் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் பொதுமக்கள் மத்தியில் கருத்து வெளியிட்டிருந்தார். தற்போது எமது பிரதேசத்தில் கொடிய கொரோனா நோயின் தாக்கம் மிகவும் வேகமாக அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.இதன் காரணமாக எமது பிரதேசத்தில் கொரோனா மரணங்களும் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அதிகமாக தாக்குவதை அவதானிக் கூடியதாகவுள்ளது.

எனவே இவர்களை பாதுகாக்கும் பொருட்டு எதிர்காலங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதுடன் இவர்களின் நோய்த் தொற்றை இனங்காண்பதற்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இவர்களை கொடிய கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப் படவிருக்கும் உயரிய முன்னெடுப்பாகும்.

எனவே, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களை கொரோனா தொற்றினை இனங்காண்பதற்கான அன்ரிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுடன் தடுப்புமருந்து பெற்றுக்கொண்டமையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.