வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கான அறிவிப்பு!

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பல சேவையாளர்கள் பணிகளுக்கு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பிரவேசிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நிறுவனங்களினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தினை சேவையாளர்கள் பணிக்கு செல்லும் தினத்தில் மாத்திரம் பாவனைக்கு உட்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவையில்லாமல் வெளிச்செல்வது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நாட்கள் மிகுந்த அவதானத்துடன் கூடியதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவர்களையும் கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டியது கட்டாயமானதாகும் எனவும் நாட்டின் சகல பிரஜைகளும் தங்களினதும் தமது குடும்பத்தினரினதும் நன்மைக்கருதி அத்தியாவசிய தேவையின்றி வெளிச்செல்லாது வீட்டிலேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்