இலங்கையின் ‘சக்தி‘ நாட்டை வந்தடைந்தது…

இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி ஒக்சிசன், இலங்கை கடற்படைக்குச் சொந்தான “சக்தி” கப்பலின் ஊடாக, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த ஒக்சிசன் தொகையை கொண்டுவருவதற்காக சக்தி கப்பல், திருகோணமலை துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்கு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதியன்று புறப்பட்டு சென்றது.

சுமார் 40 தொன் ஒக்சிசனை ஏற்றிக்கொண்டு அந்தக் கப்பல், நேற்று (22) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தற்போதைய நிலைமையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவரும் நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை அதேயளவு பேணும் வகையிலேயே இந்த ஒட்சிசன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒட்சிசனை, துரிதகதியில் நாட்டுக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை கட்றபடைத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அந்த ஒட்சிசன் தாங்கிய தாங்கிகள் இறக்கப்பட்டதன் பின்னர், மற்றுமொரு தொகை ஒட்சிசனைக் கொள்வனவு செய்வதற்காக, அந்தக் கப்பல், கொழும்பு துறைமுகத்திலிருந்து சென்னை துறைமுகத்தை நோக்கி நாளை (24) புறப்பட்டுச் செல்லும் என இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலு​கேதென்ன, இந்திய கடற்படையின் தளபதியிடம் நேரடியாக கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். அதனடிப்படையில், மேலும் 100 தொன் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.