முல்லையில் வீடுவீடாகச்சென்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்குச்சென்று தடுப்பூசிபோடும் நடவடிக்கை 23.08.2021 இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப் பிரிவில் முத்துவிநாயகபுரம், தட்டயமலை, ஒலுமடு ஆகிய கிராமங்களில் இராணுவத்தினரும், கிராமசேவையாளர்களும், இராணுவவைத்தியர்களும் இணைந்து வீடுகளுக்குச்சென்று 60வயதிற்கும் மேற்பட்டவர்ளை உறுதிப்படுத்தி சைனோபோர் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதாலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்துக் காணப்படுவதாலும், இவ்வாறு மக்களின் வீடுகளுக்குச்சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்