எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்… 

இலங்கை ராணுவ அதிகாரியின் மகள் யூடியூபில் சாதனை!இரவில் ஒன்றே ஒன்று Manike Mage Hithe என்ற பாடலின் மூலம் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளார் சிங்களப் பாடகி யொகானி இந்தப் பாடலை இதுவரை 51827625 பேர் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். சிங்கள மொழி பாடல் ஒன்று யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இரவில் ஒன்றே ஒன்று இந்த பாடல் இப்போது நாடு, மொழி கடந்து பரவலாக வரவேற்கப் பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகளை துலசா அல்விஸ் எழுதியுள்ள தோடு, சாமத் சங்கீத் இசையமைத்துள்ளார் இந்தப் பாடலை யொகானி உடன் சதீஷ்சான் பாடியுள்ளார். இந்தப்பாடல் வெளியாகிய பின்னர் அவருடைய யூடியூப் சேனலை 12 இலட்சத்திற்கு அதிகமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்இந்தப் பாடலை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் பாராட்டியுள்ளார், அந்தப் பாடல் உடைய அமிதாப்பச்சனின் பழைய பாடல் காட்சி ஒன்றை இணைத்து ஒருவர் வெளியி்ட, அமிர்தா பச்சன் அதனை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்இந்திய ரசிகர்களின் கோரிக்கைக்கு அமைய இந்தப்பாடல் தமிழிலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தமிழில் யோகானி மற்றும் அனஸ் ஷாஜகான் பாடியுள்ளார்கள். சாமத் சங்கீத் இசையமைத்துள்ளார் தமிழ் மற்றும் மலையாள பாடல் வரிகள் அனஸ் மற்றும் என்எஸ்டி ஆகியோரால் எழுதப்பட்டது.யொகானி 1993 ஜூலை 30 கொழும்பில் பிறந்தவர். இவர் பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், இசையமைப்பாளர், யூடியுபர் ஆக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். யுத்தத்தின் இறுதியில்55வது படையணிக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வாவின் மகள் ஆவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.