சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி.

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே, அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசா அனுமதி வழங்கும் செயன்முறையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் விசா வழங்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.