அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – டலஸ்…

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு சமர்ப்பித்த அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்