இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளுமையின் சிகரம் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர… (ஜனநாயகப் போராளிகள் கட்சி)

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு ஆளுமையின் சிகரம் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள். அன்னாருக்கு எமது கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கலுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் அவர்களால் இவ் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு ஆளுமையின் சிகரம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. அவர் கோவிற் தொற்று காரணமாக இவ் உலகை விட்டு விடைபெற்று சென்றதானது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாட்டில் ஜனநாயக ரீதியான நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல்வாதிகளுள் ஒருவராவர். இனமத பேதம் கடந்து மக்களுக்கு சேவையாற்றிய அரசியல்வாதி.
சர்வாதிகார ஆட்சியை என்றும் விரும்பத மனிதர். அவரின் மறைவு அரசியல் ரீதியில் அனைவருக்கும் ஓர் பாரிய இடைவெளியையே ஏற்படுத்தியிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்