கிண்ணியா பிரதேச சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தம்.

கிண்ணியா பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் செய்வாய் கிழமை(24) விடுத்துள்ளார்.
சபையில் கடமையாற்றும் சில ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதனால் சில தினங்களுக்கு சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,
எனவே மறு அறிவித்தல் வரை சபையின் சேவையை நாடி பொது மக்கள் யாரும் வரவேண்டாம் என்பதுடன் தங்களுடைய வீட்டுக்கழிவுகளை சுயமாகவே அகற்றி சுத்தத்தினை பேணுமாறும் மக்களை கேட்டுக் கொள்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்