நாட்டில் நிவும் கொவிட்-19 பதற்றமான சூழலில் பிரம்மாண்டமாக இடம்பெறும் பெரகெர; நாட்டில் தொற்றாளர்கள் அதிகரிப்பிற்கு காரணம் அரசே – ரவிகரன்…

தற்போது நாட்டில் நிலவும் கொவிட்-19 பதற்றமான சூழலில், நாம் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுபாரிய அளவில் நிகழ்வுகளையோ, போராட்டங்களையோ மேற்கொள்வதைத் தவிர்த்துள்ளோம். இந் நிலையில் தெற்கில் பிரம்மாண்டமாக பெரகெர நிகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.

ஆகவே நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பிற்கு காரணம் தற்போதுள்ள அரசாங்கமே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218ஆம் ஆண்டு வெற்றி நாள் 25.08.2021இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்தில் நினைவுகூரப்பட்டது.

இந் நிக்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வீரம் செறிந்த வெற்றிநாள் இன்றாகும். எங்களுடைய இடங்களை ஆக்கிரமிக்க முற்பட்ட அன்னியப்படைளை மாவீரன் பண்டாரவன்னியன் துரத்தியடித்த வெற்றி நாள் இன்றாகும்.

குறிப்பாக கடந்த 1715ஆம் ஆண்டு முல்லைத்தீவில் ஒல்லாந்தர்களால் கோட்டை ஒன்று அமைக்கப்பட்டதுடன், அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த கோட்டையைப் பிற்காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிந்த அன்னிய நாட்டவரான பிரித்தானியர் 1795ஆம் ஆண்டு மீளுருவாக்கம்செய்து, தமது படைத் தலைமையகமாகப் பயன்படுத்தியதாக வரலாறுகள் கூறுகின்றன.

இவ்வாறு தமிழர்களின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முல்லைத்தீவுக்கோட்டை மீது தமிழ் மன்னன், மாவீரன் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 25ஆம் நாளன்று போர்தொடுத்து முல்லைத்தீவு கோட்டையைக் கைப்பற்றியதுடன், பிரித்தானியரின் பிரங்கிகளையும் கைப்பற்றிய வரலாற்று வெற்றிநாள் இன்றாகும்.

இவ்வானதொரு தமிழர்களின் வரலாற்று வீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாளை நினைவிற்கொள்ளவேண்டும், அதற்கென முல்லைத்தீவில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கென சிலை அமைக்கப்படவேண்டும் என நான் மாகாணசபை உறுப்பினராக இருந்தகாலத்தில்  மாகாணசபையில் குரல்கொடுத்ததுடன், அதன் பலனாக முல்லைத்தீவு நகரின் மத்தியில் மாவீரன் பண்டார வன்னியனுக்குச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட மாவிரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை தூவி, பூத்தூவி ஒவ்வொருவருடமும், இந்த வெற்றிநாளை நினைவுகூர்வோம்.

அதேபோல மாவீரன் பண்டாரவன்னியன் அறுபது வெள்ளையர்களை ஒரேவாழ்வீச்சில் வீழ்த்திய முள்ளியவளைக் கற்பூரப்புல், கயட்டையடிப் பகுதியிலும் எமது அஞ்சலிகளையும், வெற்றிநாள் நினைவேந்தலையும் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்வோம்.

ஆனால் தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று அசாதாரண நிலை நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ளதாலும், நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாலும் அவ்வாறு சிறப்பான முறையில் இந்த வெற்றிநாளினை நினைவுகூர முடியவில்லை. எனவே இந்த வெற்றிநாளினை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எனது மக்கள்தொடர்பகத்தில் நினைவுகூர்கின்றோம்.

அதேவேளை முல்லைத்தீவு நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவிரன் பண்டாரவன்னியன் சிலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில் இராணுவம் மற்றும் போலீசார், புலனாய்வாளர்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.
இந்த கொரோனாக் காலப்பகுதியில் மக்களின் உயிரிழப்புக்கள் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. இத்தகைய பதற்றமானதொரு சூழலில் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று செயற்படவேண்டிய கடப்பாடுகள் அனைவருக்குமுள்ளது. அவ்வாறே சுகாதாரத் தரப்பின் அறிவுறுத்தல்களை பலரும் பின்பற்றி வருகின்றதை அவதானிக்கமுடிகின்றது.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த விடயத்திலே கட்டளைகளைப் பிறப்பிக்கின்ற இடத்தில் இருந்துகொண்டு செயற்படுபவர்கள் தென்னிலங்கையிலே காெரோனாத் தொற்று சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றுவது குறைவாகக்காணப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந் நிலையில் தற்போது நாம் சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை ஏற்று பாரிய நிகழ்வுகளை மேற்கொள்வதையோ, பாரிய போராட்டங்களை மேற்கொள்வதையோ தவிர்த்திருக்கின்றோம்.

ஆனால் தெற்கிலே “பெகெர” நிகழ்வினை இவ்வளவு பகிரங்கமாக மேற்கொள்கின்றனர். இலங்கையில் கொரோனாத் தொற்று அதிகரிப்பிற்கு காரணம் அரசுதானே தவிர வறுயாருமல்ல – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.