6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு…

நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் ,தொற்றுக்குள்ளாவோரின் தொகையும் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் அச்சமான சூழ்நிலையில் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் வரும் முன் காக்கும் நடவடிக்கையாக மக்கள் தமக்குத் தேவையென்று கருதும் சில மருந்துப் பொருட்களை (விற்றமீன்-சீ, பனடோல் மற்றும் பரசிட்டோமல் போன்றவை ) பாமசிகளிலும்,தனியார் மருந்தகங்களிலும் முன்கூட்டியே வாங்கி வைத்துப் பயன்படுத்துவதால் இவ்வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக கொள்வனவு செய்வதற்குச் செல்லும் பொதுமக்களுக்கு அவற்றை வழங்கமுடியாமல் உள்ளதாகவும் பாமசி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்  மாவட்டங்களில் விற்றமீன்-சீ,பனடோல் மற்றும் பரசிடோமல் உட்பட 6 வகையான மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பாமசி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்