கல்முனை தெற்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்கு மேலும் 20 ஆயிரம்

தடுப்பூசிகள்கிடைக்கப்பெற்றுள்ளதுஇந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் முதலாவது  தடுப்பூசி பெற தவறிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்முதன்மை அடிப்படையில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கல்முனை பிராந்திய சுகாதாரபணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்திய பிரிவுகளில்

தடுப்பூசி  செலுத்தும் மையங்களில்

பிராந்திய பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணன்  வழிகாட்டலில் இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 2000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதையடுத்து தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் மருதமுனை  அல்-மனார் (ஆரம்பப பிரிவு ) வித்தியாலயம் ,கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் ,நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயம்  ஆகிய 03  இடங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று  (26)

இடம்பெற்றது.

இதனடிப்பையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் முதலாவது  தடுப்பூசி பெற தவறிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்துதடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.