எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்!

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களில் விலை மேலும் அதிகரிக்கூடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அந்தளவு சுலபமான விடயமல்ல என அவர் கூறியுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் பேசியதாகவும் இது எமது நாட்டில் மாத்திரம் ஏற்பட்ட நிலை அல்ல எனவும் உலக சந்தையின் நிலவரம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சீனி, கேஸ், பால்மாவின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டதால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் காலத்தில் மேலும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்பதால் யதார்த்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.