சீனாவில் இருந்து 96,000 மெட்ரிக் டொன் சேதன பசளை இறக்குமதி செய்ய முடிவு…

நாட்டுக்குத் தேவையான 96,000 மெட்ரிக் டொன் சேதன பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சேதன பசளை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்கீழ் 10% நைட்ரிஜன் உள்ளடங்கிய சேதன பசளை, நைட்ரிஜன் 15% மற்றும் அமோனிய அமிலம் 80% அடங்கிய சேதன பசளை 3000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

சீனாவில் இருந்து இந்த சேதன பசளை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அடுத்த மாதம் 25ம் திகதி நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சேதன பசளை எதிர்வரும் பெரும்போக நெல் செய்கையாளர்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப்படும் என்றும் ஏனைய சேதன பசளைகளை இறக்குமதி செய்ய 30 நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.