தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : சுகாதாரத்துறைக்கு பக்கபலமாக படைவீரர்களும் களத்தில்.

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும்  தடுப்பூசிகள் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை,  நாவிதன்வெளி  போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் ஏற்பாட்டில் பல்வேறு மத்திய நிலையங்களில் வருகிறது.

காலை 8.00 மணி தொடக்கம் வழங்கப்பட்டுவரும்  தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள பிரதேச கற்பிணித்தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள் உற்சாகத்துடன் வருகைதருவதாகவும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கொவிட் தடுப்பு மருந்தேற்றல் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதுவரை தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ளாதவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.