நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு சஜித் அரசாங்கத்திடம் கோரிக்கை.

நாட்டு மக்களின் உயிர் வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஆரம்பமான சீனாவை விட இலங்கையில் மரணங்கள் இரண்டு மடங்கு அதிகரித்து விட்டதாகவும் இதுவரையில் 9,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களில் பிரபல தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர் அதிபர்கள், சாதாரண மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள சிறுவர்களும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

தங்களுக்கு நெருங்கியவர்களை இழக்கும்போது ஏற்படும் கவலை மற்றும் சோகங்களை தாம் அனுபவித்து உள்ளதாகவும் தந்தையின் மரணம் இன்னும் கண்ணுக்குள் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர்கள் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தது போன்ற நாட்டில் கொரோனா மரணங்கள் 200ஐ தாண்டி விட்டதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கொரோனா ஒரு சாதாரண தொற்று எனவும் அதனை பெரிதாக கணக்கில் எடுக்க வேண்டாம் எனவும் கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கள் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களை பணயமாக வைத்து இருப்பதை காணமுடிவதாகவும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டை முடக்கி உள்ளபோதும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மூச்சுவிட முடியாத அளவு உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்கியதாக அரசாங்கம் கூறி உள்ள போதும் அத்தியாவசிய தேவைகளுக்கு உட்படாத வாகனங்களை வீதியில் காண முடிவதாகவும் இதன் மூலம் இந்த விடயத்திலும் அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் பின்னணியில் நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமையை பாதுகாக்க முன்வருமாறு அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.