நாட்டுக்குள் விரைவில் சீனி தட்டுப்பாடு வரும் என எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்துள்ள சீனி விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் இருப்பாதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனால் ஏதேனும் ஒரு விதத்தில் சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காவிட்டால் நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

டொலர் பெறுமதி 230 ரூபாவை எட்டியுள்ளதால் கொள்வனவு விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் 50 ரூபா வித்தியாசம் காணப்படுவதாகவும் மே மாதத்தில் இருந்து சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.