சடலங்கள் பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு!

நாட்டிற்கு மேலும் 15,000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக சீனாவில் இருந்து 5000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை கொள்வனவு செய்ய விலைமனு கோரப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சடலம் பொதி செய்யும் உறை பைகளை தரம் குறைந்தவை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் புதிய தரமான உறை பைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே தரம் குறைந்த உறை பைகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதார தரப்பினருக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவென விலை மனு கோரும் நிறுவனங்கள் சில முன்மாதிரியை தரமாக காட்டி இறக்குமதியை தரம் குறைத்து மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தரம் குறைந்த கொரோனா பாதுகாப்பு அங்கிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அதிகூடிய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் சுகாதார அதிகாரிகள் சிலர் தொடர்பு பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்