கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், நேற்று முன்தினம் வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அந்த அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4 ஆயிரதை்து 347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.