கர்ப்பிணிதாய்மாருக்கான இரண்டாவது சைனோபாம் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு…

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி பொது சுகாதார பரிசோதகர் பிரிவின் ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கான இரண்டாவது சைனோபாம் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

டிக்கோயா நகர மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றதுடன் இங்கு 100 கர்ப்பிணி தாய்மாருக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அழைக்கப்பட்டிருந்த அனைத்து தாய்மாரும் வருகை தந்து தமது தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாக ஹோன்சி பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் மல்தெனிய தெரிவித்தார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது தடுப்பூசிகளை கர்ப்பிணி தாய்மார் பெற்றுக் கொண்டனர். கொட்டும் மழையிலும் போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் அனைத்து கர்ப்பிணி தாய்மாரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்