சாய்ந்தமருதில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டாவது தடுப்பூசி இன்று (30) முதல் ஆரம்பம்…

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அரிகாரி பிரிவிலும்  முதலாம்  தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று (30) முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் இன்று முதல் வியாழக்கிழமை வரை வழங்கப்படவுள்ளது.
இன்று (30) திங்கட்கிழமை காலை 08.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை சாய்ந்தமருது 01ம் கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு அல்-ஜலால் பாடசாலை முன்பாக அமைந்துள்ள சுகாதர  நிலையத்திலும், சாய்ந்தமருது 08 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு பிரதான வீதியில் அமைந்துள்ள அல்- ஹிலால் வித்தியாலயத்திலும், சாய்ந்தமருது 14ம் கிராம சேவகர்ல் பிரிவு மக்களுக்கு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், வொலிபேரியன் கிராம மக்களுக்கு வொலிபேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற.
மேலும் நாட்டில் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை அடங்களாக பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாகவும் பொதுமக்கள் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சுகாதார நடைமுறைகளை பேணுவதுடன் சட்டங்களை மதித்து நடக்குமாறும் பொதுமக்களை இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். அல் அமீன் ரிஷாத் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.