கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துரைவந்தியமேடு கிராமத்தில்  மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணமூர்த்தி 55 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து துரைவந்தியமேடு மாடு மேய்க்கும் தொழிலுக்கு சென்றிருந்த குறித்த நபர் ஆற்றுக்கருகில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு் வருதுடன் பிரதேச பரிசோதனைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்