அக்கரைப்பற்று பிரதேச சபையினால் கொரோனா தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகை திறந்து வைப்பு !

அக்கரைப்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தும் செயற்திட்டம் இன்று (30) திங்கட்கிழமை  காலை அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக் தலைமையில் பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக முதல் பதாகை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அக்கரைப்பற்று, மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், பள்ளிக்குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.எம். அஷ்ரப் மௌலவி,  பிரதேச சுகாதார வைத்திய  அதிகாரி எப்.எம்.ஏ காதர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், உப தவிசாளர் ஏ.எம். அஸ்ஹார், உறுப்பினர்களான ரீ.எம். ஐயூப், ஏ.ஜி.பர்சாத்  , 241 வது படைப்பிரிவின் தளபதி, அக்கறைப்பற்று  பொலிஸ் நிலைய பொறுப்புதாரி,  மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், உலமாக்கள், பிரதேச நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது பரவலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கோவிட் 19 பெரும் தொற்று குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறித்த பதாகைகள் பிரதேச  சபை எல்லைக்குள் 5 வட்டாரங்களிலும் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்