ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை.

30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி;. சுகுணன் தலைமையில் சிறப்பாக இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பி
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலனின் தலைமையில் சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தனியாக பிரி;க்கப்பட்டு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாகவும் வௌ;வேறு நிலையங்களில் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவவித்தியாலயம் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆகிய நான்கு இடங்களில் குறித்த மூன்று தினங்களிலும் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை சிறந்த திட்டமிடலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.