கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி.

கொரோனா தொற்றால் இதுவரை 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 900 கர்ப்பிணித் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கர்ப்பிணித் தாய்மார்கள் நூற்றுக்கு 75 சதவீதமானோர் தற்போது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணித் தாய்மார்கள் மிக விரைவாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டு மிக பாதுகாப்பாக இருக்குமாறும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்