பணி பகிஸ்கரிப்பு செய்து வரும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அமைச்சரவை உப குழு ஆசிரியர் அதிபர்கள் சம்பள முரண்பாடு குறித்து முன்வைத்துள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் 50 நாட்களுக்கு மேலாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்