நாட்டில் பிசிஆர் பரிசோதனை குறைப்பு, ஆனாலும் பாதிப்பு நான்கு மடங்கு உயர்வு…

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு இணைய தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

நேற்று 30ம் திகதி 13696 PCR பரிசோதனையும் 3173 ரெபிட் என்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 16869 பரிசோதனைகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன. நேற்று நாட்டில் 4562 பேர் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டனர். எனவே இந்த தரவுகள் படி 27.04% அளவான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்யப்படும் நபர்களில் 5% அளவு நபர்களுக்கே  test positive ஏற்படுவதாக கூறப்பட்ட போதும் நேற்றைய தரவுகள் படி அது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

ஓகஸ்ட் 19ம் திகதி 22290 பிசிஆர் பரிசோதனைகளும் 6437 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் என ஒரே நாளில் 28727 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனுடன் ஒப்பிடுகையில் நேற்று 11858 குறைந்துள்ளது. தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டுமானால் பிசிஆர் பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இவ்வாறு பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.