இலங்கையில் சமூக பரவலாக மாறியுள்ள கோவிட் பரவல்! விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்.

நாட்டில் கோவிட் வைரஸ் சமூக பரவலாக ஏற்கனவே மாற்றமடைந்து விட்டதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர், விசேட வைத்தியர் அசோக்க குணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோவிட் வைரஸ் சமூக பரவலாக மாற்றம் பெறவில்லை என சிலர் கூறுகின்றனர். எனினும், நோயாளர்கள் ஆங்காங்கே அடையாளம் காணப்படும் நிலையில், அது சமூக பரவலாகவே கருத முடியும் என்பது அனைத்து விசேட வைத்தியர்களின் நிலைப்பாடாகும்.

இதேவேளை, தடுப்பூசிகள் வழங்குவதில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கும் செயற்பாட்டுக்கு தாம் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.