சட்டத்துறையில் ஒரு ஆளுமை மிக்க குற்றவியல் சட்டத்தரணியை தமிழ் இனம் இழந்துள்ளது!

சட்டத்துறையில் ஒரு ஆளுமை மிக்க குற்றவியல் சட்டத்தரணியை தமிழ்
இனம் இழந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் வாழந்து
சட்டத்துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டிய ஒருவரை காலன்
கவர்ந்து சென்றுவிட்டான்.
பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடிபட்டு ஆண்டுக் கணக்காக எதுவித
விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த  போராளிகள்
சார்பாக கௌரி சங்கரி தவராசா நீதிமன்றங்களில் தோன்றி வாதிட்டு
பலருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர்.
மனித உரிமைகள் மீறப்படும் போது அவற்றுக்கு எதிராகத்  தானே
முன்வந்து தனது பெயரில் வழக்குகளை  நீதிமன்றங்களில் தாக்கல்
செய்து  வாதாடியவர்.
முன்னொரு காலத்தில் சட்டத்துறையில் பல  தமிழ்ச் சடத்தரணிகள்
பேரோடும் புகழோடும் விளங்கியிருக்கிறார்கள். பிற்காலத்தில் அரசு
தொடர்ச்சியாகக் கடைப்பிடித்த இனப் பாகுபாடு காரணமாக சட்டக்
கல்லூரியில் உள்நுழையும் தமிழ்மாணவர்களது எண்ணிக்கை தேய்ந்து போய்விட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்