இம்முறை மாத்தளை மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சஜித்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தும் “ஜன சுவய” கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 23 ஆவது கட்டம் இன்று(31) இடம்பெற்றது.
இதன் பிரகாரம் நாற்பத்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (4,750,000/-) பெறுமதி வாய்ந்த (High-End ICU Ventilator) அத்தியாவசிய மருத்துவமனை உபகரணம் ஒன்று மாத்தளை மாவட்ட பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அமல் ஹேமந்த ஜயதிலக்க அவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன,முன்னாள் அமைச்சர் ரஞ்சித் அலுவிகார, முன்னாள் அமைச்சர் வசந்த அலுவிகார, தம்புல்ல தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் தயா நன்தசிரி, துணை அமைப்பாளர் மங்கள பிரிநசாந்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் 22 கட்டங்களில் 64 மில்லியன் (64,124,000) ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்