2000 பெறுமதி பிசிஆர் 6500! 600 பெறுமதி ரெபிட் என்டிஜன் 2000! – அரசாங்கம் பகல் கொள்ளையில்!

2000 ரூபாவிற்கு மேற்கொள்ள முடிந்த பிசிஆர் பரிசோதனையை 6000 ரூபாவிற்கும் 600 ரூபாவிற்கு மேற்கொள்ள முடிந்த ரெபிட் என்டிஜன் 2000 ரூபாவிற்கும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை அசாதாரண விடயம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் நாட்டில் இடம்பெறும் மருந்து மாபியா வௌிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தனது நண்பர்களுக்கு இவ்வாறு மருந்து மாபியாவில் ஈடுபட வசதியளித்துள்ளதாக சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச மருந்தாக்கள் கூட்டுத்தாபனம் இருக்கும் போது அதன் ஊடாக சாதாரண விலைக்கு இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் கொடுக்காமல் தனக்கு தேவையான நிறுவனங்களுக்கு வழங்கி மருந்து மாபியாவிற்கு அரசாங்கம் இடமளித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்கம் என்றால் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறும் பழக்கத்தை பயன்படுத்தி வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி பிசிஆர் பரிசோதனையை  2000 ரூபாவிற்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனையை 600 ரூபாவிற்கும் முன்னெடுக்க அறிவித்தல் விடுக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்