நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் பவள விழா …

அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன. எனினும், உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் – 19 தொற்று நோய் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதனால் குறிப்பிட்ட நிகழ்வுகளை நடாத்த முடியாமைக்கு மனம் வருந்துகிறேன் என பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.

என்றாலும், பாடசாலையின் பவள விழா தினத்தை நினைவு கூரி, வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தும் முகமாக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம், முகாமைத்துவ குழு ஆகியவற்றின்; ஒத்துழைப்புடன் முதல் முறையாக டிஜிட்டல் மூலம் பவள விழா நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, அல் – அஷ்றக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக்  (Face Book)  பக்கத்தில் நேரடியாக இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் ஒளிபரப்பு செய்யப்படும் பவளவிழா சிறப்பு நிகழ்வுகளில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் திறப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் (01) புதன்கிழமை பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையின் கீழ் சுகாதார வழிமுறைகளைப் பேணி, 75 மரக்கன்றுகளை நட்டு, பவளவிழா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் கல்வி கற்ற, கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் வெளி ஊர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ எப்பகுதியில் இருந்தாலும் ஒன்லைன் மூலமாக இணைந்து கொள்ளலாம் எனவும் கட்டாயம் மாணவர்கள் அனைவரும் இணைந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு  நிந்தவூர் அல் – அஷ்றக் தேசிய பாடசாலையின் 75ஆவது ஆண்டு பவள விழா சிறப்பு நிகழ்ச்சிகளை ஒன்லைன் மூலமாக அனைவரும் கண்டு களிக்க,

https://www.facebook.com/alashraqppa/

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்