6ம் திகதிக்குப் பின் ஊரடங்கு எப்படி? இராணுவ தளபதி வெளியிட்ட கருத்து.

அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதிக்கு பின்னர் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனடியாக தீர்மானங்கள் எதையும் எட்ட முடியாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.