அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டோம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராக இல்லை என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு புதியதல்ல என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக யாராவது சொன்னால் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா செப்டெம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் என்றும், அந்த நிகழ்வில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொலன்னறுவை புதிய வணிக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வின் அங்குரார்ப்பணத்துக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்