காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பற்றிய தெளிவூட்டும் அறிக்கை…

* எங்கே சென்று கொண்டிருக்கிறது எமது பழம்பெரும் ஊர்?

* இங்கு நடக்கும் பித்தலாட்டங்கள், ஏமாற்றுக்கள்,
சோரம் போகுதல், கூட்டிக்கொடுத்தல் ஆகியன நாளை எமது கிராமத்தை எங்கு கொண்டுபோய்ச் சேர்க்கும்?

* இப்போது விழிப்புறவில்லையானால் பின்னர் சிந்தித்துப் பயனில்லை.

* எம்மைக் காப்போம்; எம் பிள்ளைகளைப் பாதுகாப்போம்; எம் சந்ததியை வாழ வைப்போம்; காரைதீவின் இறைமையை காப்போம், ஒன்றுபடுங்கள் மக்களே!

ஆம், எமது காரைதீவு பிரதேசத்தில் ஒரு அரசியல் கலப்பற்ற நீதியான மக்கள் ஆட்சி,ஊழலற்ற ஜனநாயக ஆட்சி, ஊர் இறைமை கருதி கடந்த 2018 உள்ளூராட்சித் தேர்தலில் எம்மவர்களை சுயாதீனமாகக் களமிறக்கி 2 ஆசனங்கள் எனும் கனியைப் பறித்திருந்தோம். இதற்காக எம் மக்கள் 2,000 வரையான வாக்குகளை எமது மீன் சின்னத்திற்கு வெளிப்படையாக அளித்திருந்ததுடன், 18 வயதை நெருங்கியும் வாக்களிக்கும் உரிமை பெறாத 2000 பேர்வரையான இளைஞர், யுவதிகளும் ஏதோ ஒரு வகையில் ஆதரவளித்திருந்தனர், சுமார் 20 பேர் வரையான புத்திஜீவிகளைக் கொண்ட சுயேட்சை நிர்வாகக் குழுவும் பலத்த சவால்களின் மத்தியில் களம் கண்டது.

எங்கள் கௌரவ குழுத் தலைவரில் இருந்து வேட்பாளர்கள் உள்ளடங்கலாக அடிமட்டத் தொண்டர் வரை செய்த தியாகம், அர்ப்பணிப்பு கொடுத்த விலை ஏராளம்.
அந்தவகையில் கிடைத்த இரு ஆசனங்களை பன்முகப்படுத்தியதன் அடிப்படையில் முதல் இரண்டு பேரை பிரதேச சபைக்குக் கௌரவ உறுப்பினர்களாக அனுப்பி அழகு பார்த்தோம்.
பின்னர் திரு.சசிகுமார், திரு.குமாரசிறி ஆகியோரைத் தெரிவு செய்தோம்.
இங்கு நாங்கள் தற்போது திரு.குமாரசிறி அவர்களைப் பற்றியே எம்மவர்களுக்குத் தெளிவூட்டவேண்டியுள்ளது.
இப்படியான நிலமை ஏற்பட்டதை இட்டு பெரிதும் வருந்துகின்றோம் .
காத்திருப்பு பட்டியலிலும் , நிரப்பு பட்டியலிலும் பலர் இருக்க இவர் தன்னை தான் போட வேண்டும் என்று கெஞ்சிக்கிட்டே இந்த அரிதான ஆசனத்தைப் பெற்றார் என்பதை விட , “தான் எப்போதும் சுயேட்சை குழுவுக்கும் , ஊர் மக்களுக்கும் கட்டுப்படுவேன்;
சொல்லுகின்ற வேளையில் பதவியை விட்டு தருவேன் ” என்றும் நாடகமாடி இருந்தார்.
தனக்குப் பதவி கிடையாமற் போகுமோ என்று அங்கலாயித்து ஒரு கட்டத்தில் தனது முகப்புத்தகத்தில் எங்கள் சுயேட்சை குழுத்தலைவரையும் குழுவையும் விமர்சனத்திற்க்கு உட்படுத்தி இருந்தார்.
அப்படி இருந்த போதிலும் நம்பிக்கையின் அடிப்படையில் இவரையும் ஆட்சி செய்ய அனுப்பி இருந்தோம்.
ஆனால் இன்று எமது எதிர்பார்ப்புக்களை வீணாக்கி இந்த பழம் பெரும் கிராமத்திற்க்கே உரிய இருப்பையும் , மாற்றார்களுடன் சேர்ந்து கூட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவர்களை எல்லாம் நாங்கள் அனுப்பியது தனியொரு ஜெயசிறில் அவர்களையோ கூட்டமைப்பையோ எதிர்த்து கொண்டு , காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க செய்ய அல்ல .
எதற்காக?
எமது ஊரிலுள்ள தமிழ் மக்களின் உட் கட்டமைப்பு பணிகள் , வீதி , பாலம் , மின்சாரம், நீர், திண்ம கழிவு அகற்றல் போன்ற குறைந்த பட்ச பிரச்சனைகளை வென்று எடுத்தல் , ஊழலற்ற நீதியான ஆட்சிக்கு குரல் கொடுத்தல். ஆனால் இதுவே தலைகீழாகி மாற்றான்களின் ஆட்சி இங்கு வர அனுமதிக்க முடியாது.

பிரேதேச சபை அமர்வின் போது எம்மவர்கள் உரையாற்றும் போது கபட்டுச்சிரிப்பு உதிர்க்கும் திரு.குமாரசிறி , முஸ்லிம் பிரதிநிதிகள் உரையாற்றும் போது மேசையில் தட்டி வரவேற்பதும், “காரைதீவு பிரதேசத்தில் இனவாதம் உள்ளது , அப்படியானால் நாங்களும் சஹ்ரான் வழியில் போராடுவோம்” என்று ஒரு முஸ்லிம் உறுப்பினர் உரையாற்ற , மற்ற ஒரு முஸ்லிம் பிரதிநிதியோ “எங்களுக்கும் சொந்தமான காரைதீவு கலாச்சார மண்டபத்தில் எப்படி நீங்கள் ஊர்மக்களை , ஆலயதலைவர்களை அழைத்து கூட்டம் கூட முடியும் ? அப்படியானால் எங்கள் சமையத்தலைவர்களையும் அழைத்து கூட்டம் கூடுவோம்” என்று உரக்கச் கர்ச்சித்த பிறகும் கூட அதே மாற்றார்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கும் எமது உறுப்பினர் திரு.குமாரசிறி அவர்கள் இனியும் அந்தப் பதவியில் தொடர முடியாது என்பதற்க்காக விளக்கம் கேட்க கடந்த 16.07.2021 அன்று ஓர் நிர்வாகம் சபை கூட்டத்திற்கும் அழைத்து இருந்தோம். சுயேட்சை நிர்வாக சபையின் அத்தனை பேர் வந்து இருந்தும் அவரோ கலந்து கொள்ள மறுத்து விட்டார் அல்லது ஒளித்து விட்டார்.
அன்று அவர் தார்மீக ரீதியாக பதவி விலகி காத்திருக்கும் அடுத்தவருக்கு (திரு.நமச்சிவாயம் ஜெயக்காந்தன்) வழிவிட்டு இருக்க வேண்டும் , அதேபோன்று தேவைப்படின் மற்ற எமது உறுப்பினரும் நடந்து இருப்பார்.

“ஊறு விளைவிக்க கூடிய கல்முனை- மாவடிப்பள்ளி நெல் காணி வீதி நிர்மாணம் ” எமது காரைதீவுக்கான ஆபத்து என்பதனால் அதற்க்கு எதிரான தீர்மானம் கடந்த மாத சபை அமர்வில் எமது தமிழ் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட இருந்த வேளை , மாற்றான் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வராமல் தடுத்த எமது உறுப்பினர் , இப்போது கூட அவர்களுடன் சேர்த்து சோரம் போய் எமது ஊரையே விற்க்கவும் துணிந்து விட்ட திரு.குமாரசிறி அவர்கள் இனியும் எமது பிரதேச சபையை அலங்கரிக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

திரு. குமாரசிறி மக்களின் வாக்குகளால் நேரடியாக வென்று வந்த நபர் அல்ல .
மற்றவர்களுக்கும் பகிர வேண்டிய ஆசனம் அது.
தனது தடம் புரண்ட நகர்வினால் , காரைதீவான்களின் உள்ளத்தில் பீரிட்டு பாயும் உணர்வுகளை உணர்ந்து உடனடியாக பதவியை விட்டுக் கொடுத்து , உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப நடப்பதற்க்கு எதிர்வரும் தேர்தல் களங்களில் நின்று பாருங்கள் .
அதைவிட்டு பிச்சை எடுத்தது போன்று நாங்கள் எடுத்து தந்த அதுவும் இரவல் பாத்திரத்தை தமதாக்கி கதாநாயகனாகவோ களமாடவோ வேண்டாம்.
” சுயேட்சை உள்ளுராட்சி பிரதிநிதி தானாக ஒப்பமிட்டு பதவி விலகல் கடிதம் தந்தால் ஒழிய பதவி விலக்க முடியாது ” எனும் சட்டத்திலுள்ள ஓட்டையை தவறாகப் பயன்படுத்த விரும்பினால் , காரைதீவின் தன்மானமுள்ள மக்கள், இளைஞர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள்.

” நல்லனத்தின் ஊங்கும் துணையில்லை ; தீயினத்தின் அல்லற் படுப்பதூ உம் இல்”

இவ்வண்ணம்
சிரேஸ்ட ஸ்தாபக உறுப்பினர்கள்
சுயேட்சை குழு
காரைதீவு

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.