தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், அதன்போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒகஸ்ட் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வின்றி அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்