18-30க்கு இடைப்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி.

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 30 வயதுக்கும் கீழ் பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகள், மாவட்ட மட்டங்களில் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்த வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் 3.7 மில்லியன் பேர் இருக்கின்றனர் என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகள் இன்று (02) முதல் முன்னெடுக்கப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஒக்டோபர் இறுதிக்குள், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்