நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்.

கல்முனை  நற்பிட்டிமுனை பிரதேசத்தின் சில தினங்களாக மாலை வேளைகளில் காட்டு யானைகளால் கிராம மக்களின் வேளாண்மை பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக வேளாண்மை உரிமையாளர் மற்றும் அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுயானைகள் பயிர்களை துவம்சம் செய்த வேளை மக்கள் பட்டாசு கொழுத்தியும், உரத்த குரலில் சத்தமிட்டும், விரட்டியுள்ளனர்.இதனால் வேளாண்மை செய்கின்ற விவசாயிகள் கவலை அடைகின்றனர். எதிர்வரும் காலங்களில் நெற் செய்கையினை கைவிடும் அளவிற்கும்,செய்துள்ள நெற்பயிரினை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு செல்வேமோ என்ற அச்சம் அடைந்துள்ளனர்.

அப் பகுதியில் மிக நீண்டகாலமாகவிருந்து காட்டுயானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.