பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை – இம்ரான் எம்.பி…

கிழக்கு மாகாணத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜீ.திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில், பிரதிப்பிரதம செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒரு வருட பயிலுனர் சேவையின் பின் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற அடிப்படையிலேயே பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப் படுகின்றது. இதன் அடிப்படையில் 2019 இல் மத்திய அமைச்சு, திணைக்களங்களில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் ஏற்கனவே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இதே காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபையில் இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இரண்டு வருடங்களாகியும் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. இதனால் இந்தப் பட்டதாரிகள் தமக்குரிய வரப்பிரசாதங்களை இழந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அமைச்சு திணைக்களங்களில் நிரந்தரமாக்கப்பட்டது போன்று கிழக்கு மாகாண சபையில் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களையும் சேவையில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.